
அண்மையில் விஐபி சினிமாஸ் இயக்குனர் செல்வமேரி ஏற்பாட்டில் நடுவுல கொஞ்சம் சிரிப்பை காணோம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சி டெம்ப்லா பைனான்ஸ் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டி. மோகன் தலைமை தாங்கினார். தமிழகத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை பேச்சாளர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் வலம் வந்த மதுரை முத்து மற்றும் ஜல்லிக்கட்டு தொகுப்பாளரும் சிறந்த பேச்சாளரும் மாண அன்ன பாரதி இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் படைத்தனர்.

இந்நிகழ்வில் கவிமாறன் நகைச்சுவை கலைஞர் சத்தியா சான் நண்டு ரமேஷ் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் செல்வமேரி.
