25.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

மலேசிய தடகள தலைமை பொறுப்பிலிருந்து காரீம் விலக வேண்டும்!

மலேசிய தடகள சம்மேளன தலைவர் பதிவிலிருந்து காரீம் இப்ராஹிம் விலக வேண்டும் என மலாக்கா தடகள சங்கத்தின் தலைவர் பாட்சில் பக்கார் வலியுறுத்தினார்.
மலேசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று காரீம் தமது பதவியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றார் அவர்.
அதுமட்டுமின்றி இந்த சம்மேளனத்தின் உயிர் மட்ட பொறுப்பில் உள்ளவர்களும் விலக வேண்டும் என்றார் அவர்.
தற்போது இந்த சர்ச்சை விளையாட்டின் நம்பகத் தன்மைக்கும் தடகள வீரர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய தடுகள சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பாட்சில் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை நீடித்தால் தடகள வீரர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தடைகள வீரர்கள் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர், இந்த சர்ச்சை நீடித்தால் அனைத்தையும் சீர்குலைக்கும் ஏன் அவர் தெரிவித்தார்.
உலக தடைகள அமைப்பின் விதிகளை பின்பற்ற தவறினால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மலேசியா தடை விதிக்கப்படலாம் என அவர் எச்சரித்தார்.
‘இது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போன்ற முக்கிய போட்டிகளில் பங்கேற்பதையும், தகுதி பெறும் முறைகள் மற்றும் நிதி உதவியையும் பாதிக்கும்’ என அவர் நினைவுறுத்தினார்.
ஆகையால் மலேசிய தடகள சம்மேளனத்தின் தலைவர் காரீம் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது இந்த சர்ச்சை தடைகள விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக அவர் சொன்னார்.
மேலும் உலக தடைகள அமைப்பிடமிருந்து வந்த கடிதங்களை கையாண்ட விதம் தொடர்பாக மலேசிய தடகள சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நூர்ஹயாதி காரீம் பதவி விலக வேண்டும் என பாட்சில் வலியுறுத்தினார்.
உலக அமைப்பிடமிருந்து வந்த ஒரு முக்கிய கடிதம் பற்றி சுமார் 42 நாளாக செயற்குழுவுக்கு இவர் தெரிவிக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
ஜனவரி மாதம் பெறப்பட்ட அந்த கடிதம் கடந்து வியாழக்கிழமை நடந்த கவுன்சில் கூட்டத்தில் தான் வெளிவந்தது. இந்த கடிதம் உடனடியாக பகிரப்பட்டு இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கு கவுன்சிலுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த தாமதம் விவாதத்தை கட்டுப்படுத்தியதோடு உலக தடைகள சம்மேளனத்தின் காலக்கெடுவுக்கு முன்னதாகவே கூட்டமைப்பு தாமதமான பதிலுக்கு தள்ளியதாகவும் அவர் கூறினார்.
ஐந்தாண்டு வரம்பை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு திருத்தத்தை அங்கீகரிப்பதில் கவுன்சிலிங் பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றத்தின் மூலம் உலக தடைகள அமைப்பின் நேர்மை கட்டமைப்பின் கீழ் காரீம் தகுதியற்றவர் என்று முடிவை விளையாட்டுக்கான தற்காப்பால் நீதிமன்றம்(CAS) உறுதி செய்து இருந்தாலும், இவர் மீண்டும் பதவிக்கு வர அனுமதி கிடைத்தது.
இது தாக்கல் செய்யப்பட்டபோது அவர்கள் அங்கேயே இருந்தனர். இது அங்கீகரிக்கப்பட்டது என பாட்சில் கூறினார். தங்களுக்கு தெரியாது என்று இவர்கள் இப்போது சொல்ல முடியாது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles