25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

🤖 இந்திய தொழில் முனைவோருக்கு AI பயிற்சி – இலவச வாய்ப்பு; ஹெனிக்கன் மார்கெட்டிங் மலேசியா சமூகப் பொறுப்பு முயற்சி

உலகளவில் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு ஹெனிக்கன் மார்கெட்டிங் மலேசியா, தனது சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், வசதி குறைந்த 10 இந்திய தொழில் முனைவோருக்கு இலவச டிஜிட்டல் மற்றும் AI பயிற்சி வழங்குகிறது.

இந்த பயிற்சி, தொழில் முனைவோர் தங்களின் வணிகத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

📅 பயிற்சி காலம்: மே 4 முதல் மே 8 வரை (5 நாட்கள்)
📍 இடம்: கோலாலம்பூர்

இந்த பயிற்சியை சிறப்பாக கற்றுத் தங்கள் வணிகத்தை மேம்படுத்தும் 3 சிறந்த பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📌 விண்ணப்பிக்கும் முறை:
இடங்கள் 10 மட்டுமே உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 22க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
📱 WhatsApp: 017-2077527

விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள்:

  • பெயர்
  • வயது
  • வணிக நிறுவனம் பெயர்
  • தொழில் விவரம்

இந்த முயற்சி, ஹெனிக்கனின் டைகர் மலேசியா மற்றும் மலர் டெய்லி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, இந்திய தொழில் முனைவோர் தங்களின் வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles