
மலேசிய தடகள சங்கம் அதன் தலைமைப் பொறுப்பு சர்ச்சை குறித்து நாளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என உலக தடைகள சம்மேளனம் அதிரடியாக கெடு விதித்துள்ளது.
நிர்வாகப் பொறுப்பில் தடகள சங்கத்தின் தலைவர் காரீம் இப்ராஹிம் தொடர்ந்து நீடிப்பது தகுதியானதா மற்றும் சம்மேளனத்தின் விதிகள் சர்வதேச விதிகளுடன் இவ்வாறு சீரமைக்கப்படும் என்ற இரண்டு முக்கிய கேள்விகளுக்கு, துணைத் தலைவர் வான் சாலே தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் காரீம் இப்ராஹிம் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவரது மகளும் பொதுச் செயலாளருமான நூர்ஹாயாத்தியும் கலந்து கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு செயல்பட்ட அரசியலமைப்பு மாற்றமே இந்த நெருக்கடியின் மையமாக உள்ளது.
2018-ல் விளையாட்டு நடுவர் மன்றம் காரீம் தகுதியின்மைக்கு எந்த காலவரம்பையும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், மலேசிய தடகள சங்கம் தடைகளுக்கு ஐந்தாண்டு கால வரம்பை அறிமுகப்படுத்தியது.
அந்த திருத்தம் காரீம் மீண்டும் பதவி ஏற்று கடந்த ஜூன் மாதம் தலைவராவதற்கு வழி வகுத்தது.
ஆனால் உலக தடகள சம்மேளனம் தற்போது அந்த நிலையை சர்ச்சைக்குள்ளாக்கிறது.
உலகளாவிய அமைப்பு, மலேசிய தடகள சங்கத்தின் சட்ட விதிமுறைகளை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கும், அதற்கான காலவரையறை வரைபடத்தை சமர்ப்பிக்குமாறும் மலேசிய தடகள சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
மேலும் தலைமை பொறுப்பு குறித்து அதன் நிலைப்பாட்டை தெரிவிக்கும் முறையான தீர்மானம் ஒன்றை கவுன்சிலிடமிருந்து வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அறிவித்துள்ளது.
அத்தகைய நபர்கள் பதிவில் இருப்பதை தடுக்க வேண்டும் என்று அதன் விதிகள் உறுப்பினர் அமைப்புகளை கோருகின்றன.
