27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: மலேசியாவில் RTM மற்றும் Unifi TV அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள்

🔥 Views : 1,046
👁 Reading Now : 42

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை RTM மற்றும் Unifi TV பெற்றுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

மொத்தம் 104 போட்டிகளும் நேரலையாக Unifi TV-யில் ஒளிபரப்பப்படும். அதேவேளையில், பெரும்பாலான போட்டிகள் RTM MyTV மற்றும் RTM Klik வழியாக நேரலையாகவும் அல்லது தாமதமாகவும் ஒளிபரப்பப்படும்.

இந்த ஒளிபரப்பிற்காக அரசாங்கம் 24 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், உயர்தர ஒளிபரப்பு மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பொது திரை வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம், அனைத்து மலேசியர்களும் எந்த தடையுமின்றி இந்த உலகத் தரமான கால்பந்து திருவிழாவை ரசிக்க முடியும் என அவர் கூறினார்.

இந்த உலகக் கிண்ணம் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles