27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தடை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்காக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம்!

🔥 Views : 2,606
👁 Reading Now : 39

தனி நபர்களின் தடை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்காக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தொடர்பு துறை துணையமைச்சர் தீயோ நீ சிங் கூறினார்.
இந்தத் தீர்ப்பாயம் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியால் தலைமை தாங்கப்படும் என்றார் அவர்.
இந்த தீர்ப்பாயத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்கள் கொண்டிருக்கும் என்றார் அவர்.
இது ஒரு தற்காலிக
(ad hoc) மேல் முறையிட்டு தீர்ப்பாயம்.
இது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுவதோ அல்லது விசாரிக்கப்படுவதோ இல்லை என்றார் அவர்.
மாறாக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை இந்த மேல்முறையிடிகளை விசாரிப்பார் என்றார் அவர்.
எனவே இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால் பொதுமக்கள் அந்த சேனலை பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை கூறினார்.
ஒருவரின் சமூக ஊடக கணக்கு மூடப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கருத்துரைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles