
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் அமைக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
செந்தோசாவில் நடைபெற்ற ஒற்றுமை சித்திரை பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்திய பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஒரு நிரந்தர கலாச்சார மையம் அவசியம் என வலியுறுத்தினார்.
காலை முதல் மாலை வரை கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு அரசு சாரா அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்:
👉 பாரம்பரிய நடனம்
👉 இசை நிகழ்ச்சிகள்
👉 இந்திய பாரம்பரிய விளையாட்டுகள்
👉 குடும்ப நிகழ்ச்சிகள்
👉 பாரம்பரிய உணவுக் கடைகள்
👉 குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள்
உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
“பண்பாட்டின் மூலம் அனைவரையும் ஒரே சமூகமாக இணைக்க முடியும். அதுவே எங்களின் நோக்கம்,” என குணராஜ் தெரிவித்தார்.
இந்த விழாவின் உச்சக்கட்டமாக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்தியர் பாரம்பரிய கலாச்சார மையம் அமைப்பது குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த மந்திரி புசார், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த மையம் அமைக்கப்படும் என தெரிவித்ததாக குணராஜ் கூறினார்.



