
சிலாங்கூரின் கிளாங் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஜே.கே(டி) தாமான் செந்தோசா பள்ளியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் வண்ணமயமான நிகழ்வுகளும், ஒற்றுமை உணர்வும், கலாச்சார பெருமையும் கலந்த சிறப்பான நிகழ்வாக அமைந்தது என்று நிகழ்வில் கலந்துகொண்ட சிலாங்கூர் மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமீருடீன் ஷாரி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய சமுதாயத்தின் பல்வேறு பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தன.
அத்துடன் பாரம்பரிய உணவுகள், மசாலா பொருட்கள், இசைக்கருவிகள் மற்றும் இந்தியர்களின் அடையாளமாக திகழும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வின் போது இந்திய சமுதாயத்தின் கலை மற்றும் கலாச்சார மரபுகளை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும், எதிர்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்லவும் ஒரு கலாச்சார மையத்தை உருவாக்க வேண்டும் என்ற YB டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் பரிந்துரைக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது என்கிறார் அவர்.
மேலும் “ரோடா ஹரப்பான் அனக் செந்தோசா” எனும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி உதவி மற்றும் போக்குவரத்து வசதிகள் தேவைப்படும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பல்வேறு இன, மத, கலாச்சாரங்களை கொண்டாடும் மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து திகழும் என்றும், அனைத்து இனங்களின் பண்பாட்டு மரபுகளும் சமூகத்தின் வலிமையாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்தினருக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகளும் தெரிவிதத்துக்கொண்டார்



