
பிரசிண்ட் பிடாரா குடியிருப்பாளர் சங்கத்தின் (Persatuan Penduduk Precint Bidara) 11ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் கலந்து கொண்டு சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் குணராஜ், சங்கத்தின் தலைவரான திரு டோனி லோகநாதன் மற்றும் முழு செயற்குழுவினரின் அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் சமூக நலனுக்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டினார். குடியிருப்பாளர்களின் நலன் மேம்படுத்துவதில் சங்கம் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சிறந்த வாழ்விட சூழலை உருவாக்குவதில் மடானி அரசாங்கம் சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் அவர் கூறினார். மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரசிண்ட் பிடாரா குடியிருப்பாளர் சங்கம் எதிர்காலத்திலும் மேலும் பல சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்து, குடியிருப்பாளர்களிடையே ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் வலுப்படுத்த வேண்டும் என டாக்டர் குணராஜ் வாழ்த்துத் தெரிவித்தார். நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



