
மலேசிய தமிழர் சமூக பண்பாட்டு நட்புறவு பயணம் மேற்கொண்டுள்ள 14 பேர் கொண்ட குழுவினர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளார்கள். மணிவாசகம் தலைமையில் இந்தப் பயணம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சர் செங்கோட்டையனை இந்த குழுவினர்கள் சந்தித்தார்கள். அமைச்சர் மணிவாசகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதுபோல டத்தோ கோபாலகிருஷ்ணன் அமைச்சரிடம் ஆசி பெற்றார். மணிவாசகம் கூறும்போது எம்ஜிஆர் 110 ஆண்டு விழா மிகச் சிறப்பாக மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கு தங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் மலேசியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் அமைச்சரும் முடிந்தவரை வருகிறேன் என்னுடைய கட்சிக்காரர்களையும் முக்கிய அதிகாரிகளையும் வரச் சொல்வேன் என்றார் பல வருடங்களாக எம்ஜிஆர் மன்றத்தை நடத்தி இதன் மூலம் எம்ஜிஆர் புகழை பரப்பி வருவதாக மணி வாசகம் அமைச்சரிடம் தெரிவித்தார் அமைச்சரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.




