25.2 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

கோட்டா ராஜாவில் விளையாட்டு வழியே ஒற்றுமை: மலேசியா தின பியாலா ஃபுட்சல் போட்டி மூலம் இளைஞர்களுக்கு புத்துணர்வு

🔥 Views : 3,641
👁 Reading Now : 33

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் தலைமையில், கோட்டா ராஜா DUN செந்டோசா ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசியா தின பியாலா ஃபுட்சல் போட்டி, பகுதி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பாக நிறைவடைந்துள்ளது. விளையாட்டு மைதானம் முழுவதும் வேகமான அசைவுகள், சுறுசுறுப்பான ஆட்டமும், ஆரோக்கியமான விளையாட்டு உணர்வும் நிறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டு, சிறந்த ஆட்டத் திறமையை வெளிப்படுத்தின. “இதுவே நாம் விரும்பும் இளைஞர்களின் ஆற்றல் — சுறுசுறுப்பு, ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் விளையாட்டு மூலம் நட்பை வளர்ப்பது” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் ஒன்றிணைந்த முயற்சி

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த, கிளாங் அரச நகர மன்றம் (MBDK) மற்றும் ஷா ஆலம் நகர மன்றம் (MBSA) உறுப்பினர்கள், DUN சென்டோசா மற்றும் DUN சுங்கை காண்டிஸ் KKI குழுக்கள், MADANI சமூகத் தலைவர்கள், நிகழ்ச்சி இயக்குனர் சகோதரர் செல்வம், அனைத்து ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மற்றும் நேர்மையாகவும் தொழில்முறையிலும் கடமையாற்றிய நடுவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பங்களித்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, சிலாங்கூர் முன்னாள் கால்பந்து வீரர் திரு. சோமசுந்தரம் கலந்துகொண்டு, இளம் வீரர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தார். அவரது வருகை இளைய தலைமுறையினருக்கு பெரும் உத்வேகமாக அமைந்தது.

வெற்றியாளர்கள் பட்டியல்:

  • சாம்பியன்: MPP Zone 15A — RM2,000
  • இரண்டாம் இடம்: Avatar SG — RM1,000
  • மூன்றாம் இடம் (இணைந்து): MPP Zone 15B & SS Putra FC — தலா RM500
  • சிறந்த வீரர்: தேவா (Avatar) — RM300
  • சிறந்த கோல்கீப்பர்: ஜமால் (MPP Zone 15A) — RM300

இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெறும் போட்டிகளாக மட்டும் இல்லாமல், மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரவும், இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவும், சமூகத்தையும் இளைய தலைமுறையினரையும் நெருக்கமாக்கவும் ஒரு தளமாக அமைந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜின் இத்தகைய முன்முயற்சிகள், கோட்டா ராஜா இளைஞர்களை விளையாட்டு வழியே ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோட்டா ராஜா இளைஞர்களே, தொடர்ந்து சிறந்து விளங்குங்கள் — உங்கள் சமூகத்தின் பெருமையை மேலும் உயர்த்துங்கள்! 🏆⚽

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles