
செப்டம்பர் 16/ 09/ 2026அன்று S.H Bistari Bistro உடைய முதல் தளத்தில் மாலை 7:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் லீகா முஸ்லிமீன் உடைய புதிய தலைவர் டத்தோ டாக்டர் ஷாகுல் ஹமீத் அவர்கள் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று சிறப்புரை செய்து துவங்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து சங்கத்தின் உடைய தலைவர் ஹாஜி சௌகத் அலி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அதைத்தொடர்ந்து சங்கத்தின் உடைய புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதை கூலிம் ( kulim) லீகா முஸ்லிமினுடைய தலைவர் cikgu ரஃப்பேல் தலைமையேற்றி நடத்தினார்கள். இதில் சங்கத்தின் உடைய புதிய தலைவராக போட்டியின்றி துவான் அன்வர்த்தீன் PJM அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் சங்கத்தின் உடைய துணைத்தலைவராக துவான் புர்ஹானுத்தீன் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் செயலாளராக துவான் இப்ராஹிம் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொருளாளராக துவான் நஜூரூல் அமீன் அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து துணைப் பொறுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் உஸ்தாத் ஹபீப் அவர்கள் நிறைவுரையாற்றி முன்னாள் சங்கத்தின் உடைய தகுதிமிக்க தலைவர் செளகத் அலி அவர்களினுடைய சாதனைகளையும், தியாகங்களையும் பாராட்டி பேசினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியினுடைய இறுதியில் துஆ செய்து உஸ்தாத் முஹ்சின் அவர்கள் நிறைவு செய்தார்கள்.



