33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

இந்திய தொழில் முனைவர்கள் எதிர் நோக்கும் சவால்கள்! நாளை இணையம் வாயிலாக சிறப்பு கருத்தரங்கு

🔥 Views : 7
👁 Reading Now : 52

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த்தொற்று தாக்கத்தினால் இந்திய தொழில் முனைவர்கள் பல்வேறு பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் எதிர்கால சவால்களை சமாளிப்பது எப்படி தொடர்பில் இணையம் வாயிலாக மலேசிய இந்திய தொழில் முனைவர்கள் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய இந்தியர் தொழில் முனைவர் சங்கத்தின் தலைவர் டத்தோ மோகனா கிருஷ்ண தலைமையில் நடக்கும் இந்த கருத்தரங்கில் நூறு பேர் பங்கேற்கிறார்கள். ஹஜ்ரா சிலாங்கூர் திட்டத்தின் மூலம் தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் மாநில அரசு 8 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் இந்திய தொழில் முனிவர்களுக்கு உதவுவது தொடர்பில் தனது கருத்துக்களை முன் வைப்பார்.
நாளை இரவு ஒன்பது மணிக்கு இணையம் வாயிலாக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles