33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சுங்கை பூலோ மக்களின் குறைகளை கேட்டறிந்து வழக்கறிஞர் சிவராசா கவுன்சிலர் சுரேஷ் பேருதவி

🔥 Views : 11
👁 Reading Now : 38

மக்கள் நடமாட்ட உத்தரவு காலத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்படும் மக்களின் குறைகளை கேட்டறிந்து சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசா மற்றும் பெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் சுங்கை பூலோ வட்டார மக்களுக்கு பேருதவி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நடமாட்ட உத்தரவால் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.
மக்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை. சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் கஷ்டப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நேரடியாக உணவு கூடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று வழக்கறிஞர் சிவராசா கவுன்சிலர் சுரேஷ் தெரிவித்தனர்.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கி இருக்கிறோம். இருப்பினும் இன்னமும் கூடுதலான மக்கள் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.
இவர்களுக்கும் கண்டிப்பாக உதவிகள் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


கோத்தா டமான்சாரா இந்திய கிராம தலைவர் மகாதேவியும் தனது வட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு பல வகையில் உதவி புரிந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles