
சுகாதார துணையமைச்சர் நூர் அஸ்மி கசாலி நேற்று கோலகங்சாரிலும், சுங்கை சிப்புட்டிலும் தடுப்பூசி மையங்களுக்கு வருகை புரிந்தார்.
தடுப்பூசி போட வந்த பொதுமக்களின் பிரச்சனைகளையும், கொவிட் 19 தொடர்பான பாதிப்புகளையும் கேட்டறிந்தார்..
மஇகா சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் தலைவர் இராம, மஇகா செயலாளர் மணிமாறன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சுங்கை சிப்புட்டில் இருந்து தடுப்பூசி செலுத்த கோலகங்சார் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இலவச வேன்களை ஏற்பாடு செய்த ம இ கா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனையும் அவர் பாராட்டினார்.
