28.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

பத்து நாடளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் 3000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் விரைந்தன

🔥 Views : 9
👁 Reading Now : 27

பத்து நாடாளுமன்ற தொகுதியில் 3,000 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் விரைந்து அனுப்பப்பட்டு வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட மூன்று லட்சம் வெள்ளி மானியத்தில் 3,000 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரச சார்பற்ற இயக்கங்கள் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் தொண்டர்கள் எனக்கு பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக் கூடைகளை வழங்குவதில் துணை புரிகிறார்கள்.
அரசாங்கம் கொடுத்த மானியத்தில் 3000 பேருக்கு மட்டுமே உணவு கூடைகளை வழங்க முடிகிறது.


நோய்தொற்று தாக்கம் ஏற்பட்டது முதல் இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கி இருக்கிறேன்.
எனது தொகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
நல்லுள்ளம் படைத்த வர்கள் மற்றும் அரச சார்பற்ற இயக்கங்கள் வழங்கும் உணவு கூடைகளையும் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles