26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மருந்து இல்லாமல் தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் விசாரணை ஆரம்பமானது!

🔥 Views : 8
👁 Reading Now : 27

பொதுமக்கள் சிலருக்கு கோவிட்-19 மருந்து இல்லாமல் வெறும் ஊசி மட்டும் போடப்பட்டு இருப்பதாக புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த புகார்கள் தொடர்பில் தடுப்பூசி திட்ட பணிக்குழு விசாரணையை தொடங்கியது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய போலீஸ் மற்றும் ஆயுதப்படைகளின் ஒத்துழைப்புடன் இப்புகார் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பணிக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய தடுப்பூசி பெறுவோர் ஊசி செலுத்தப்படுவதற்கு முன்னரும் செலுத்தப்பட்ட பின்னரும் சிரிஞ்ச்சை சோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மலேசிய ஆயுதப்படை மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் பணி சுங்கை பட்டாணி விமானப்படைத் முகாமில் நடைபெற்றது.
அப்போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாக புகார் கூறப்பட்டது..
இதே போன்ற மேலும் இரு சம்பவங்கள் கோலாலம்பூர், அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திலும் பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்திலும் நிகழ்ந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles