26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தடுப்பூசி போடுவதில் தாமதத்தால் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

🔥 Views : 9
👁 Reading Now : 32
நாட்டில் கோவிட் நோய்ததொற்றினால் மரணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் வேதனை அளிப்பதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
மக்களுக்கு தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக கூறுவதில் எவ்வித அர்த்தமில்லை.
மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி போடுவதில் மற்ற நாடுகளை காட்டிலும் நாம் பின் தங்கி விட்டோம்.
இதனால் நோய்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் மரண எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காது.
தடுப்பூசி போடுவதில் மெத்தனப் போக்கினால் நோயாளிகளின் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 199 பேர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles