
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலக வேண்டும் என்று கிளாந்தான் மாச்சாங் அம்னோ எம்பி டத்தோ அமாட் ஜஸ்லான் மீண்டும் வலியுறுத்தினார்.
அவசரகால உத்தரவை மீட்டுக் கொண்டது தொடர்பில் மாமன்னரின் அனுமதியைப் பெறவில்லை என்பதால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும்.
அம்னோ கட்சி சட்ட விதிகளுக்கு ஏற்ப மாட்சிமை தங்கிய மாமன்னரை நாங்கள் தற்காப்போம் என்று அவர் சொன்னார்.
