31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

நெருக்கடியில் பெரிக்காத்தான் அரசாங்கம்! இன்று அம்னோவின் அதிரடி முடிவு என்ன?

🔥 Views : 8
👁 Reading Now : 42

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் தற்போது பெரும் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அம்னோ உச்சமன்றக் கூட்டம் இணையம்வழி நடைபெறுகிறது.
அம்னோ எம்பிக்கள் உட்பட 42 தேசிய முன்னணி எம்பிக்கள் பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஒரு தரப்பு கூறிவருகிறது.
இது உண்மை என்றால் நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சவால் விடுத்துள்ளார்.
எங்களுக்கு ஆதரவாக 107 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாக அவர் சொன்னார்.
இந்நிலையில் இன்று கூடும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் எத்தனை எம்பிக்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles