
தோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மலேசிய
வீரர்களான ஏரென் சியா – சோ வூய் எக் வெற்றிப் புன்னகையுடன் நேற்றிரவு நாடு திரும்பினார்.
இவர்களுடன் அம்பு எய்தல்,ஓட்டப்பந்தயம், குறி சுடுதல்,பூப்பந்து
ஆகிய போட்டிகளில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 23
பேர் சிப்பாங் அனைத்துலக விமான
நிலையம் வந்தடைந்த இவர்களை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
துணையமைச்சர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் மற்றும்
மலேசிய ஒலிம்பிக் மன்றத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிம் வரவேற்றனர்.
