27.5 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் பக்கத்தான் – சுயேட்சை எம்பிக்கள் வலியுறுத்து

🔥 Views : 11
👁 Reading Now : 22

வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் மற்றும் சுயேச்சை எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நானே இன்னமும் பிரதமர். தமக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்று நேற்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவிப்பு செய்தார்.
செப்டம்பர் மாதத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் வரும் 9ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தை கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங், பெர்ஜூவாங் கட்சி தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, வாரிசான் சபா கட்சி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி உட்பட 105 எம்பிக்கள் இதை வலியுறுத்தி உள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் பிரதமருக்கு ஆதரவு இருக்கிறதா என்பது தெரிய வரும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles