29.3 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செனாய் பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது!

🔥 Views : 8
👁 Reading Now : 30

ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் செனாய் வட்டாரத்தில் உள்ள தாமான் அமான் மற்றும் கம்போங் செபாக்காட் பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதனால் இங்கு வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று ஜொகூர் செனாய் தாமான் செந்தெக்ஸ் ஜசெக கிளைத் தலைவர் சுரேந்திரன் பலராமன் தெரிவித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு மோசமான வெள்ள பேரிடரில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இவர்கள் பெரும்பாலோர் இந்தியர்கள் ஆவர்.

இதனிடையே தற்போது வெள்ளம் ஏறுவதற்கு காரணமாக இருந்த கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுரேந்திரன் தெரிவித்தார். கூலாய் நகராண்மைக் கழகத்தின் சார்பில் மண்வாரி இயந்திரங்கள் உதவியோடு கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கின என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles