29 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

சிரியா அகதி பெண் பல துயரங்களை கடந்து இன்று விமானியானார்

🔥 Views : 8
👁 Reading Now : 28

மாயா கசல் என்ற சிரியா நாட்டைச் சேர்ந்த பெண் உள்நாட்டு போரிலிருந்து தப்பி வந்த லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது கல்வியை பெற போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது விமானியாக தகுதி பெற்றுள்ளார். ஓவ்வொரு முறை நான் விமானத்திற்குள் நுழையும்போதும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போது ஒரு பைலட். எனது வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. பள்ளிகளிலேயே நிராகரிக்கப்பட்டவள் நான்” மாயா கசலுக்கு 16 வயது இருக்கும்போது தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயுடன் சிரியாவிலிருந்து தப்பி பிரிட்டனில் இருந்த தனது தந்தையுடன் சேர வந்தார். ஆறு ஆண்டுகள் சென்றுவிட்டன. தனியார் பைலட் அனுமதி பெற்ற ஒரே சிரியா அகதி மாயா கசல் மட்டுமே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles