33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

அரசு – பக்கத்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சி தாவல் தடுப்பு சட்டத்திற்கு முன்னுரிமை

🔥 Views : 7
👁 Reading Now : 37

பக்கத்ததான் ஹரப்பான் மற்றும் அரசாங்கம் இடையே நேற்று ஏழு அம்சங்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அணி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கட்சி தாவல் தடுப்பு சட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் இடம் பெற்றிருக்கும் 7 அம்சங்களில் வாக்காளரின் வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைப்பது, பிரதமர் பதவி 10 ஆண்டுகள் மட்டுமே மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணையாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுத் தேர்வும் இதில் அடங்கும். தேசிய மீட்சிக்குழுவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வது மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருக்கு அமைச்சர் பதவிக்கு இணையாக வசதியும் நிதியும் வழங்கப்படுதும் இதில் அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles