33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு கருப்பையா நிதியுதவி

🔥 Views : 7
👁 Reading Now : 51

அண்மையில் பெய்த அடை மழையால் கெடா மாநிலத்தில் யென் மாவட்டம் உட்பட பல இடங்களில் மோசமான வெள்ளமும் சேதமும் ஏற்பட்டது. இதில் மெர்போக் பகுதியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. இங்கு குடியிருக்கும் பல இந்தியக் குடும்பங்கள் உட்பட 25 குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர் நோக்கின. கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மெர்போக்கை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு கெடா பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா நிதி உதவி வழங்கி உதவி புரிந்துள்ளார். மேலும் மெர்போக் தொகுதி கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி மல்லிகா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கணிசமான நிதியை திரட்டினார். இறுதியில் மெர்போக் கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி மல்லிகா மற்றும் கருப்பையா வழங்கிய நிதி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles