33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பாலிங் மாவட்டத்தில் நலிவுற்ற முதியோர்களுக்கு சமூக நல உதவிகள்!

🔥 Views : 9
👁 Reading Now : 61

பாலிங் மாவட்டத்தில் வசிக்கும் நலிவுற்ற முதியவர்கள் மற்றும் வறிய நிலையில் உள்ள இந்தியர்களின் சமூக நல தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தாம் ம.இ.கா – உதவும் கரங்கள் இயக்கத்தின் வழி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சமூக சேவகர் செகு இராமசாமி தெரிவித்தார். நோய்த்தொற்று காரணமாக பலர் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இச்சுழலில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உதவிகரங்கள் உதவியுடன் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக இராமசாமி குறிப்பிட்டார். தாமான் ஓர்க்கிட்டில் உடல் நலிவுற்ற முதியவர் முனியாண்டி நடேசனுக்கு செகு இராமசாமி கட்டிலும் மெத்தையும் வழங்கினார். தொடர்ந்து ஒரு பகுதி உடல் செயலிழந்த வேலாயுததிற்கு சமூக நல உதவி பதிவு மற்றும் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நடவடிக்கைக்கு உதவியதாக செகு இராமசாமி சொன்னார். இவட்டார சமூக நல உதவிக்கு பாலிங் மாவட்ட மன்ற உறுப்பினர் ப.டேவிட், வெங்கடேஸ், தேவராஜ் மீசை, ஆசிரியர் மகேந்திரன், தர்மராஜ் மற்றும் உதவும் கரங்கள் இளைஞர்கள் தொடர்ந்து தோள் கொடுப்பதாக இராமசாமி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles