26.6 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் ! அள்ளப் போவது யார்?

🔥 Views : 27
👁 Reading Now : 61

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் காணாமல் போனது. ஆனால் அது யாருக்குச் சொந்தமான லவ்து என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். 1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி. கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் சான் ஜோஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அதன் பிறகு அந்தக் கப்பல் கரீபியன் கடலில் காணாமல் போனது. அதில் இருந்த 600 பேருடன் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் நகைகளுடன் அது மூழ்கிப்போனது. கொலம்பியவின் கடலுக்கு அடியில் 600 மீ ஆழத்தில் கப்பலின் பாகங்கள் கிடக்கின்றன. அதில் உள்ள தங்கப் புதையல் யாருக்குச் சொந்தம் என்பதில் பல நாடுகளும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles