32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா , கமலா ஹரிஸ்!

🔥 Views : 4
👁 Reading Now : 67

:அமெரிக்காவில் வெளியாகும், ‘டைம்’ இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். டைம் இதழ் ஒவ்வோர் ஆண்டும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக, இதழின் ஆசிரியர்கள் குழு, மிகப்பெரிய பட்டியலை வெளியிடும். இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜிங்பிங், ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles