34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஏற்பாட்டில் ரத்த தான முகாமில் 700 பேர் ரத்ததானம் வழங்கி சாதனை

🔥 Views : 14
👁 Reading Now : 54

மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஏற்பாட்டில் நான்கு தினங்களாக செராஸ் இயோன் மால் பேரங்காடியில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் 700 பேர் ரத்ததானம் வழங்கி சாதனை படைத்துள்ளனர். மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஒவ்வொரு மாதமும் ரத்ததான முகாமை ஏற்பாடு செய்து வருவதாக அதன் தலைவர் பிரேமா கண்ணன் தெரிவித்தார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது.

தேசிய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு அதற்கு உதவும் பொருட்டு நான்கு தினங்களாக ரத்த தான முகாம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி, காஜாங் கவுன்சிலர் தியாகராஜன், செராஸ் இயோன் மால் நிர்வாகி நளினி ஆகியோர் சிறப்பு வருகை தந்து ரத்ததான முகாம் வெற்றி பெற ஆதரவு வழங்கினர். மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் ஏற்பாட்டில் நடக்கும் 39 ஆவது மருத்துவ முகாம் இது என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் ஆதரவு பெரும் உற்சாகம் அளிப்பதாக தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles