33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

செப்டம்பர் 23 முதல் கோல கெடா பெரி முனையம் மீண்டும் திறக்கப்படும்!

🔥 Views : 7
👁 Reading Now : 21

இம்மாதம் 23 ஆம் தேதி முதல் லங்காவி செல்வதற்கான கோல கெடா பெரி முனையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் 6 -ஆம் தேதியிலிருந்து இங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கோவிட் -19 சோதனைக்கான நடவடிக்கைகள் யாவும் தயார் நிலை செய்யப்படுவதற்கு ஏதுவாக வரும் வியாழக்கிழமை பயணங்கள் மீண்டும் தொடருமென கொன்சோர்டியும் பெரி லைன் வென்சர் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் மனிதவளம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் நிர்வாகி கேப்டன் பஹாரின் பஹாரோம் தெரிவித்தார். அண்மையில் கோல பெர்லிஸ் பெரி முனையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles