31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த மம்மத் யானைகளை உருவாக்க மீண்டும் முயற்சி

🔥 Views : 3
👁 Reading Now : 59

சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மம்மத் யானைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமத யானைகள் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத் திட்டத்துக்காக 15 மில்லியன் டாலர்களை ஸ்பான்சர் பணமாகப் பெற்றிருக்கிறது. மாமத யானை மற்றும் ஆசிய யானையின் கலப்பினம் ஒன்றை உருவாக்கினால், கிட்டத்தட்ட அது சடை யானையைப் போன்றே இருக்கும் என்றும், சைபீரியாவின் பரந்த வெளிகளில் இந்த விலங்குகள் விடப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles