33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நஜீப்பின் 95 லட்சம் வெள்ளி காசோலையைப் பயன்படுத்தி பங்களா வாங்கினார் ஷாஃபி

🔥 Views : 7
👁 Reading Now : 66

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்ற 95 வெள்ளி லட்சம் காசோலை மூலம் தலைநகர், புக்கிட் துங்குவில் ஒரு பங்களா வீட்டை வாங்குவதற்காக டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி பயன்படுத்தியதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர், முகமட் நசாருடின் அமிர் தெரிவித்தார். தம் மீதானக் குற்றத்தைக் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி பதிவுச் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் முகமட் ஷாஃபி ஒப்புக் கொண்டார். அப்பதிவில் அளித்த வாக்குமூலத்தின்படி நஜீப்பிற்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கியதற்தாக அவரிடமிருந்து மற்றும் கட்சியிடமிருந்து பெற்ற 43 லட்சம் வெள்ளி மற்றும் 52 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 2 காசோலைகளைப் பயன்படுத்தி 95 லட்ச வெள்ளி மதிப்புள்ள வீட்டை முகமட் ஷாஃபி வாங்கி இருப்பதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles