
மக்களவையில் மாலை நேரக் கூட்டத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ஙா கோர் மிங் தலைமையேற்பதை மூத்த அமைச்சர் ஒருவர் தடுத்துள்ளார். இக்கூட்டத்திற்கு மக்களவைச் சபாநாயகர், அஸார் ஹருண் தலைமையேற்க எழுத்துப்பூர்வமான முறையில் ஙா கோர் மிங் அழைக்கப்பட்டார். இந்த முடிவு மூத்த அமைச்சரிடமிருந்து பிற்பகல் 1.50 மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து அது மீட்டுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி தொடங்கி அஸார் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். பொதுவாக மக்களவைச் சபாநாயகருக்கு 2 துணைச் சபாநாயகர்கள் மாறி மாறிக் கூட்டத்தை நடத்த உதவி செய்வார்கள். தற்போது ஒரு துணைச் சபாநாயகருக்கானப் பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
