
பினாங்கு குளுகோர்,மிண்டன் ஹைட்ஸ்,3 மற்றும் 6 ஆவது சாலைப் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெள்ளப் பிரச்சனைக்கு உடனை தீர்வு காணும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் தெரிவித்தார். வெள்ளப் பிரச்சனையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் இப்பகுதி மக்கள் எழுப்பிய குரலுக்கு செவிசாய்த்து இப்பிரச்சினைக் குறித்து அண்மையில் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதாக கூறினார். நேற்று இப்பகுதிக்கு வந்து நிலவரங்களை நேரில் பார்வையிட்டப் பின்னர் மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதாக சொன்னார். மழைக்காலங்களில் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து வரும் நீர் இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருப்பதாக கூறினார். ஆகையால் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உடன் வந்திருந்த பொதுப்பணி இலாகா மற்றும் வடிகால் நீர்ப்பாசன இலாகா அதிகாரிகள் தம்மிடம் உறுதியளித்ததாக சொன்னார். தமது சட்டமன்றத் திகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சளைக்காமல் தனது பணியை மேற்கொண்டு வருவேன் என அவர் தெரிவித்தார்.



