
போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு ஒன்றில் விசாரணைக்கு உதவும் பொருட்டு முக்கிய சாட்சிகளாக ஆஜராக சகோதரர் மற்றும் சகோதரி இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் சிவசாந்தி த//பெ சிபனந்தன் (வயது 50 ) சிவவிஜான் த/பெ சிபனந்தன் ( வயது 43 ) என்று போலீசார் தெரிவித்தனர். இவர்களின் இறுதி முகவரி எண் 1033 லோரோங் தெஜா 23,தாமான் கெலாடி,08000 சுங்கைப்பட்டாணி கெடா என்பதாகவும. .இவர்களை பற்றி தகவல் அறிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் நுர்ஹயாதி கைருடின் 04 – 42992222 இணைப்பு 2112 மற்றும் 019 – 4656361 என்ற எண்களுடனோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்துடனோ தொடர்புக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



