
இந்நாட்டு இந்தியர்களை நீங்கள் மட்டும் பிரதிநிதிக்கும் கட்சி அல்ல என்று மஇகாவுக்கு அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி பதிலடி கொடுத்துள்ளார். தேசிய முன்னணியில் இதர இந்தியர் கட்சிகள் சேருவதை ம இகா வரவேற்க வேண்டும். ஐபிஎப், மக்கள் சக்தி மற்றும் மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சிகளும் இந்தியர்களை பிரதிநிதிக்கிறது. இந்த கட்சிகளும் இந்தியர்களின் ஆதரவை தேசிய முன்னணிக்கு கொண்டு வருவதை ம இகா தடுக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமானால் அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
