
இவ்வாண்டு தொடக்கம் முதல் நேற்று முன்தினம் வரை கோவிட் கொடிய நோய் தொற்றுக்கு 67 சிறார்கள் மரணம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஆறு பேர் மட்டுமே மரணமடைந்தனர். ஆனால் இப்போது நோய் தொற்றினால் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகளவில் மரணம் அடைந்து வருவது பெரும் கவலையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியை போலும் இலக்கை சுகாதார அமைச்சு கொண்டுள்ளது.



