
அவசியம் உள்ள குறிப்பிட்டத் தரப்பினருக்கு மூன்றாவது ஊக்கத் தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இந்த மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்துவது தொடர்பான வழிகாட்டி தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகாட்டி அங்கீகாரத்திற்காக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மூன்றாவது டோஸ் மற்றும் ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கான ஒப்புதல் ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து மட்டுமே இதுவரை கிடைத்துள்ளதாக கூறிய அவர், இதற்கான அங்கீகாரத்தை தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பும் வழங்க வேண்டும் என்றார்.



