25.7 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

12ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயம் விடுபடக் கூடாது அரசாங்கத்திற்கு மீரா கட்சி கோரிக்கை

🔥 Views : 5
👁 Reading Now : 62

12ஆவது மலேசிய திட்டம் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாக்கல் செய்கிறார். 2021 ஆம் முதல் 2025ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய திட்டத்தை காலை 11.30 மணிக்கு பிரதமர் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதார மேம்பாடு, சமூகங்களை பாதுகாப்பது மற்றும் சமூக நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த 12 ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயம் விடுபடக் கூடாது என்று மீரா கட்சியின் தேசிய தலைவர் கேபி சாமி கேட்டுக்கொண்டார். இந்தத் திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அரசாங்க இடம்பெற்றிருக்கும் இந்திய தலைவர்கள் என்ன திட்டங்களை முன்வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் இந்த மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயம் புறக்கணிக்கக் கூடாது என்பதே எங்களின் கோரிக்கையாகும். இந்திய சமூகத்தின் தேவைகளை அறிந்து அதற்குரிய திட்டங்களை அரசாங்கம் வகுக்க வேண்டும் இன்று கேபி சாமி கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 11 மலேசிய திட்டங்களிலும் இந்திய சமுதாயத்திற்கு எந்தவொரு ஒரு நன்மையும் கிட்டவில்லை. அம்னோ சார்பில் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனி கவனம் செலுத்தி இந்திய சமுதாயம் பயனடையும் வகையில் நல்ல அறிவிப்புகளை செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles