
மித்ரா நிதி தவறாக கையாளப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யும்படி ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமாவுக்கு முன்னாள் அமைச்சர் பொன். வேதமூர்த்தி சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை அமைச்சர் ஹலிமா ஏற்றுக்கொண்டு போலீஸ் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ. கணபதி ராவ் சவால் விடுத்துள்ளார். வாருங்கள். ஒன்றாக இணைந்து போலீஸ் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யலாம் என்று பொன். வேதமூர்த்தி சவாலை அமைச்சர் ஹலிமா ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மித்ரா நிதி யாருக்கு வழங்கப்பட்டது என்பதை அமைச்சர் பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் இந்த நிதி வழங்கப்பட்டது என்பதையும் அமைச்சர் ஹலிமா இந்திய சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
