
வெளிநாட்டில் சொத்துக்களை குவித்துள்ள உலகத் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் மலேசியர்களை பற்றி பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை கடந்த வாரத்தில் சபாநாயகர் டத்தோ அஸாஹர் தள்ளுபடி செய்தார். இருப்பினும் இன்று நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட சில உறுப்பினர்களும் கேள்வி பண்டோரா பேப்பர்ல ஆவணங்கள் பற்றி கேள்விகள் எழுப்பியதால் நாடாளுமன்றம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
