
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு அமைச்சருக்குரிய அஸ்தஸ்தில் உயர்பதவி வழங்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார். பக்கத்தான் ஹரப்பான் மற்றும் அரசாங்க இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்ப டத்தோஸ்ரீ அன்வாருக்கு இந்த பதவி வழங்கும் அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த கடிதத்தை டத்தோஸ்ரீ அன்வாரிடம் வழங்கியிருப்பதாக அவர் சொன்னார். உலக அரசியல் அரங்கில் ஒரு மாபெரும் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
