30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

டத்தோ ராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவம்! எனக்கு எதிராக அவதூர் பரப்பும் நபர் மீது நடவடிக்கை வேண்டும்! பினாங்கு டேவிட் மார்ஷெல் போலீஸ் புகார்

🔥 Views : 31
👁 Reading Now : 28

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம் .இராமச்சந்திரன் தாக்காப்பட்ட சம்பவத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி பொய்யான தகவலை பரப்பிவரும் தரப்புக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷல் போலீசில் புகார் செய்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு நபரை வைத்து பொய்யான சத்திய பிரமாணத்தை ( SD ) தயார் செய்து வெளியிட்டிருக்கும் செயலை பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நிருபர் ஒருவர் மேற்கொண்டுள்ளார். அரசியல் மற்றும் தம்மீதான தனிப்பட்ட நோக்கத்திற்காக இந்த பழி வாங்கும் படலம் தொடங்கப்பட்டுள்ளது. டத்தோ இராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் தமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அவர் வன்மையாக மறுத்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இந்த பொய்யான தகவலை பரப்பி வரும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென டேவிட் மார்ஷெல் தமது போலீஸ் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles