
சிலாங்கூர் மாநிலத்தின் 22 தொகுதிகளில் 12 தொகுதிகளில் மட்டும் போட்டி நடைபெறும் வேளையில் உலுலங்காட் தொகுதி ம இகா தலைவராக டாக்டர் செல்வராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலு லங்காட் தொகுதி தலைவர் பதவிக்கு டாக்டர் செல்வராஜா வேலுசாமி மற்றும் துணைத் தலைவர் ராச செல்வம் கருப்பையா ஆகியோர் போட்டியின்றி தேர்வுப் பெற்றனர். இதில் நிரந்தர தலைவராக அண்ணாமலை தங்கவேலு போட்டியின்றித் தேர்வுப் பெற்றார். இதனிடையே தம் மீது நம்பிக்கை வைத்துத் தொகுதித் தலைவராகத் தம்மைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் டாக்டர் செல்வராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.



