
குடையின் கம்பியால் மணைவி தாக்கியதால் கணவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்துமலை கம்போங் லெட்சுமணாவில் தங்களது வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது 45 வயதுடைய தமது கணவரை குடையின் இரும்புக் கம்பியினால் அவரது 26 வயதுடைய மனைவி தாக்கியதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைனால் தெரிவத்தார். தமது அண்டை வீட்டுக்காரர் தற்கொலை செய்துகொண்டதாக பெண் ஒருவரிடமிருந்து நள்ளிரவு மணி 12.35 அளவில் போலீசிற்கு தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். போலீஸ் மேற்கொண்ட விசாரணயில் அந்த ஆடவர் தற்கொலை செய்யப்படவில்லை. மாறாக தகராறின்போது அவரது மனைவியே அவரை தாக்கியுள்ளார் என தெரியவந்ததாக அவர் சொன்னார்



