29.9 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

100 கோடி தடுப்பூசி மைல்கல்லை கடந்து இந்தியா சாதனை

🔥 Views : 19
👁 Reading Now : 54

நாட்டு மக்களுக்கு, 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா இன்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்தில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று, மக்களுக்கு ஒரே நாளில் 2 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அக்டோபர் 21 ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி 100 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles