33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட அமானா விருப்பம்

🔥 Views : 8
👁 Reading Now : 30

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட அமானா கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட ஜசெக அனைத்திலும் வெற்றி பெற்றது. 8 இடங்களில் போட்டியிட்ட கெஅடிலான் 3இல் வாகை சூடியது. ஆறு இடங்களில் போட்டியிட்ட அமானா மற்றும் பெர்சத்து தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் பெர்சத்து கட்சி இல்லை என்பதால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் 2இல் போட்டியிட அமானா விருப்பம் கொண்டிருப்பதாக அமானா கட்சியின் தேர்தல் இயக்குனர் டத்தோ அஸ்முனி தெரிவித்தார். இதனிடையே கெஅடிலான் கட்சி மொத்தம் 12 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles