
அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் அம்னோ தனித்து போட்டியிடுவதா அல்லது இதர கட்சியுடன் ஒத்துழைப்பதா என்பது தொடர்பில் முடிவு செய்ய அம்னோ உச்சமன்ற கூட்டம் இன்றிரவு பரபரப்பாக கூறுகிறது. இதுவரை எந்தவொரு முடிவு செய்யவில்லையென அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். இன்று நடைபெறவிரும் அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் ஒவ்வொரு டிவிசனின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே தவிர அது ஒரு விழா அல்ல என்பதையும் அம்னோ கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



