
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை நேற்றுடன் 100 கோடியை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம். ஜப்பானை விட 5 மடங்கு, ஜெர்மனியை விட 9 மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியதற்காக பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தியதற்காக இந்திய அரசுக்கு உலக சுகாதார அமைப்பின் தங்க டெட்ரோஸ் அதனோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


